மானுட ஒற்றுமைஉலக நாடுகளை ஆளும் அனைத்து அரசுகளும் – அவை எப்படிபட்ட கொள்கைச் சார்புடைய அரசுகள் ஆனாலும் – மக்களின் இயல்பான எதிர்பார்புக்களை நிறைவேற்றுவதில் முழுமையாக

தோற்றுவிட்டன. இவைகள் கடைபிடிக்கும் கொள்கைகளும், அணுகுமுறைகளும் அந்தக் கால மன்னராட்சி நிர்வாக முறைகளிலிருந்து சற்றே மாறுபட்டனவாகத்தான் உள்ளனவே தவிர, மானுட வாழ்வின் மேம்பாட்டை குறிக்கோளாக்க் கொண்டவையாக இல்லை. ஒவ்வொரு நாளும் தனது அன்றாட வாழ்க்கைக்காக உணவிலிருந்து, உயிரை பாதுகாத்துக் கொள்வது வரை மானுட இனம் கடுமையாக போராட வேண்டியுள்ளது.

இந்தப் போராட்டத்திலிருந்து விடுபட வழி? நாம் சிந்திக்க வேண்டும். உலகின் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்களின் தேவையும், எதிர்பார்ப்பும் ஒன்றுதான். அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலைகொண்ட வாழ்க்கை! இந்த வாழ்வை, அற்புதமான இந்த எதிர்பார்ப்பை அரசுகளால் தரமுடியாது. ஏனெனில், சராசரி மனிதனைப்போல அவைகளும் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன. நமக்காகவே போராடிக் கொண்டிருப்பதாக அவைகள் கூறிக்கொள்கின்றன! அப்படிக் கூறிக்கொண்டே ஏதாவது ஒரு பெயரில் நம்மை பிளக்கின்றன,வேறு வழியில்லை என்றும் கூறுகின்றன. இவைகளின் போக்கு இயற்கையின் இயல்பான போக்கிற்கு முற்றிலும் முரண்பட்டது. அதனால்தான், இன்று இயற்கையில் கூட மாறுதல் ஏற்பட்டு மானுட வாழ்விற்கு அச்சுறுத்தல் ஆகிவிட்டது.

எனவே இதற்கு ஒரே மாற்று, மானுட ஒற்றுமை. இயற்கையின் இயல்பில் அது உள்ளது. எல்லா விதத்திலும் உள்ளது. அதனையே அடிப்படையாகக் கொண்டு அந்த உன்னத ஒற்றுமைக்கு வழிகாண வேண்டும். அதனைச் சிந்திப்போம். ஆழமாக சிந்திப்போம். இதற்குமேலும் நாட்டு நிர்வாகிகளிடம் நமது சிந்தனையை ஒப்படைப்பதைத் தவிர்ப்போம்.

மேலும் படிக்க…