பரிகாரம் ஒரு வடிகாலே!
செப்டம்பர் 19, 2007
கிரக நிலைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் பரிகாரம் செய்கிறோம். இது வடிகால் போன்றது என்று ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கூறுகிறார்.
பரிகாரங்கள் செய்வதால் நிவாரணம் பெறலாம். எல்லாவற்றையுமே ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒவ்வொரு வாரத்திற்கும், ஒவ்வொரு ராசிதாரருக்கும் ஒரு விருட்சத்தை (மரத்தை) ஒதுக்குகிறோம். அதேபோல, பரிகாரமாக எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை கூறுகின்றோம். குறிப்பிட்ட விருட்சத்தை பராமரிக்கும் போது அல்லது மரக்கன்றை நடும் போது கிரகத்தினால் ஏற்படும் தாக்கம் குறைகிறது. அதேபோல, அந்த ராசிக்குரிய கடவுளை வணங்கும் போது கடுமையான பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.