ஒலிம்பிக் சங்கம் பதில் கூறவேண்டும்!
செப்டம்பர் 10, 2007
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தியை பாலியல் திரிபு காரணங்களைக் கூறி நோகடித்தன் விளைவாக அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்கின்ற செய்தி நமது நாட்டிற்கும், உலக ஒலிம்பிக் இயக்கத்திற்கும் அவமானமாகும்.
இயற்கையில் ஆண், பெண் என்பது மட்டுமின்றி, இப்படிப்பட்ட ஆணுமற்ற, பெண்ணுமற்ற எந்த பாலியலும் சாரா திரிபும் பிறப்பில் ஏற்படுவது தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தும், அதையே பெரிய காரணமாக்கி அவர்களுக்கு சமூக அடையாளமே தராமல் ஒதுக்கி வைக்கும் துயரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இது பிறவியிலேயே பாலியல் திரிபு எனும் பால்சாரா நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தும், அதையெல்லாம் தாண்டி எந்தத் துறையில் அவர்கள் முன்னேற முயற்சித்தாலும் சமூகம் அவர்களை அதே குறையைக் காட்டி ஒதுக்கித் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு தடகள வீராங்கனை சாந்தியும் ஆளாக்கப்பட்டிருப்பது கொடுமையிலும், கொடுமையாகும்…….