எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!
அக்டோபர் 6, 2007
மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது. வேதங்களில் அதர்வன வேதத்தில் முதலில் தேவதைகள், அதிதேவதைகள் ஆகியவற்றிற்கு பரிகாரப் பூஜைகள் செய்யும் போது எலுமிச்சைப் பழத்தை பலியிடுவது வழக்கம். அதற்குக் காரணம், அந்தப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. ஜீவன் உடையதைதானே பலியிட முடியும்.
அறிவியலபடி எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த சிட்ரிக் அமிலம் கிருமி நாசினி. பித்தம், கபம் போன்றவற்றையெல்லாம் நீக்கக்கூடியது. இந்தப் பழத்தில் இருந்து வீசக்கூடிய வாசமே குதூகலமான சூழலை உருவாக்கவல்லது.
எலுமிச்சைக் கன்று, மரம் ஒரு வீட்டில் இருந்தால் வைத்தியரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை, வாஸ்து பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்று முன்னோர்கள் கூறுவார்கள்.