Western Catchmentநீலமலை என்றும், மலைகளின் அரசி என்றும் புகழப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழகக் – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அழகிய மற்றொரு வனப்பகுதியே வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்-1.

ஊட்டியில் இருந்து பார்சன் வேலி என்று அழைக்கப்படும் தமிழக மின்வாரியம் அமைத்துள்ள நீர் மின் நிலையத்திற்காக கட்டப்பட்டுள்ள பார்சன் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து முக்குறுத்தி காட்டுப் பகுதிக்குள் செல்லும் பாதையில் (வனத்துறையினரின் சிறப்பு அனுமதி பெற்று) ஒரு 10, 15 கி.மீ. சென்றால் அதன் முடிவில் நாம் எழில் கொஞ்சும் மலைத் தொடரையும், எப்போதும் சாரலும் மழையுமாக இருக்கும் மிகக் குளிர்ந்த பிரதேசத்தை அடைவோம். இதுவே வெஸ்டர்ட்ன கேட்ச்மென்ட்-1.

போகும் வழியில் இரு பக்கத்திலும் விண்ணுயர்ந்த மலைகள். சூரிய ஒளியில் பட்டு மிளிரும் சிகரங்கள். கீழே ஆங்காங்கு கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளில் ஓவிய வடிவமாய் தேங்கி நிற்கும் நீர் பரப்புக்கள்.

மேலும் படிக்க‌……