சேது சமுத்திரத் திட்டத்திற்காக படுத்தப்படும் கடற்பகுதியில் உள்ள நிலத் திட்டுக்களை ராமர் பாலம் என்று பா.ஜ.க. உள்ளிட்டக் கட்சிகள் புது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், கடல் பகுதியை ஆழப்படுத்துவதால் தமிழ்நாட்டிற்கு நிலநடுக்க ஆபத்து ஏற்பட்டுள்ளதாக “நிபுணர்கள்” சிலர் கூறியிருப்பது அடிப்படையற்ற அச்சத்தை உருவாக்கும் முயற்சியாகத் தெரிகிறது!

Tectonic Platesசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேது சமுத்திரத் திட்ட எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் இப்படிப்பட்ட அச்சத்தை உருவாக்கியுள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்துவதால், அது அப்பகுதியில் ஒரு புவியியல் ரீதியிலான சமமின்மையை ஏற்படுத்திவிடும் என்றும், அதனால் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உருவாகும் என்றும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் கோபாலாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புவியியலை பாடமாகப் படித்தவர்களுக்கும், நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை விஞ்ஞானப்பூர்வமாக நன்கு அறிந்தவர்களுக்கும் இவர் கூறுவது சற்றும் உண்மையற்றது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்வார்கள்.

படியுங்கள் விவாதியுங்கள்…

Leave a Reply